2021 லங்கா பிரீமியர் லீக் டி20 போட்டிகளில் இன்று நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கும் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 193 ஓட்டங்களை பெற்றுது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 91 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்படி, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் 102 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.