கொழும்பு துறைமுக நகரத்தில் ( colombo port city) டிஜிட்டல் கரன்சி அல்லது கிரிப்டோ கரன்சியை (Crypto Currency) ஐ பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலய முகாமைத்துவ ஆணைக்குழுவின் தலைவர் சாலிய விக்ரமசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் துறைமுக நகர வளாகத்தில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக இந்த நாணயங்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி அமெரிக்க டொலர்கள், டிஜிட்டல் கரன்சிகள் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை இங்கு பயன்படுத்த அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டில் கிரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளது.