நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் மின்வெட்டு இன்னும் சில மணித்தியாலங்களில் முழுமையாக சரி செய்யப்படும் என மின் பொறியியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்உற்பத்தி இயந்திரம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மின்தடை காரணமாக அதன் இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று தானாக நின்றுள்ளது, ஆனால் மற்றைய ஜெனரேட்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதுக்காக நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.
132kV transmission அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் அதன் முறையான விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கொழும்பில் தேசிய வைத்தியசாலை உட்பட பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் ஏற்கனவே வழமைக்கு திரும்பியுள்ளது.
மீதமுள்ள பகுதிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.