ஒமிக்ரோன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால்
கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை
உறுதிப்படுத்துமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளது.

ஒமிக்ரோன் வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது எனவும், இதனால் ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.