இன்று கோதுமை மாவில் கரட், தக்காளி, வெங்காயம் சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
துருவிய கரட் – 1\4 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பூண்டு – 2 பல்
இஞ்சி – 1/2 இன்ச் அளவு
வரமிளகாய் – 1

செய்முறை

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி,பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் சீரகம், துருவிய கரட்டை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், மாவை தோசைகளாக ஊற்றி, அதனைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துப் பரிமாறிக்கொள்ளவும்