ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அண்மைய தரவுகள் படி, ஆஸ்திரியாவில் 66 சதவீதமான மக்கள் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரிய மக்களில் கணிசமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்ற நிலையில், எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த கால எல்லைக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 3,600 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. அபராதம் செலுத்தாதவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்த மக்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாதான்.

தற்போது ஆஸ்திரியாவில் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த நவம்பர் 22ஆம் திகதி அரசாங்கம் மீண்டும் ஒருமுறை முழு முடக்கநிலையை அறிவித்தது. இது குறைந்தது பத்து நாட்களுக்கு நீடிக்கும்.

இது ஆஸ்திரியாவின் 9 மில்லியன் மக்களை வேலைக்கு, அத்தியாவசியமான ஷாப்பிங் மற்றும் உடற் பயிற்சிக்காக மட்டும் விட்டு விட்டு வீட்டில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கிறது