தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு “13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்” என இருந்த நிலையில், தற்போது “தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதும் இலங்கை – இந்திய ஒப்பந்தமும்” என மாற்றப்பட்டுள்ளது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“புதிய வரைவு தயாரிக்கப்பட்டபோது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கின்றது.

இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடர்ந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது” – என்றுள்ளது.