வசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் மடியிலே…..

வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத தருணத்திலே…

தனிமையின் தாக்கங்கள் தகர்ந்து போகும் தாயுள்ளத் தருணத்திலே….

ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே….

இன்பத்தில் இசையும் இதய ஒலியாகும் தாயின் ஈர்ப்பாலே…

அழகிய காதலும் அளவில்லா நிலையடையும் தாயின் உள்ளத்தாலே….

புன்னகை தேகமும் பூங்காற்றின் வசமாகும் அன்னையின் அகத்தாலே….

கருமை நினைவுகளும் நிலவின் ஒளியாகும் தாயின் சொல்லாலே….

– சுரேஷ் குமார் (மித்ரன்) –