புருண்டி- தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 38 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு மத்திய ஆப்பிரிக்க நாடான புருண்டியின் தலைநகர் கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் நேற்று (07) தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 60- இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என நாட்டின் துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா தெரிவித்தார்.

400 போ் மட்டுமே அடைக்கக்கூடிய சிறைச்சாலையில், 1,500 இற்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருந்ததால் அதிகளவான உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து புருண்டி துணை ஜனாதிபதி ப்ரோஸ்பெர் பஸூம்பன்ஸா கருத்து வெளியிடவில்லை.

இதேவேளை கிடேகாவில் உள்ள பிரதான சிறைச்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதமும் தீ விபத்துச் சம்பவம் ஏற்பட்டிருந்தது. எனினும் உயிரிழப்புச் சேதங்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.