தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் வாரம் என கண்காணிப்புகள், கெடுபிடிகள் உள்ள நிலையில், யாழ்.குருநகரில் வீதியில் ரயர் கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் காலை குருநகரில் வீதியில் ரயர் கொழுத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.