பூண்டு, வெங்காயம் இரண்டுமே உணவிற்கு அதிமுக்கிய உணவு பொருள். இவற்றின் ஆரோக்கியம் ஒரு பக்கம் இருந்தாலும் சமையலுக்கு சுவை கூட்டுவதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல.

குறிப்பாக இவை இரண்டும் குறைந்த கலோரி கொண்டவை. இப்படி பல நன்மைகள் இருந்தாலும் முளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை தினமும் ஒன்று சேர பயன்படுத்துவது உடல் நலத்திற்கு தீங்கு கொடுப்பவை ஆகும். சரி வாங்க இரண்டு சேர்த்து சாப்பிடும் போது ஏற்படும் தீமைகள் குறித்து பார்க்கலாம்..

நன்மைகள்:-

  • பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற இரண்டையும் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பு கரையும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது, இரத்த அழுத்தம் குறைக்கும். புற்றுநோய், நாள்பட்ட வியாதிகளுக்கு உதவும் என பல வகை ஆரோக்கியங்களை தருகின்றன.
  • குறிப்பாக இவற்றை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியங்களையும் கொடுக்கின்றது. சில பூண்டு பற்களை உணவு சாப்பிடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக சாப்பிடுவதால் செரிமானம் வேகமாக இருக்கும்.

தீமைகள்:-

  • முளைவிட்ட பூண்டு மற்றும் வெங்காயம் உடலின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சிலருக்கு நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, குடல் எரிச்சல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
  • முளைவிட்ட பூண்டை அதிகமாக உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். இது மூளைக்கு விஷம் என்கின்றனர். இவை மூளைக்கான இரத்த ஓட்டத்தை தடை செய்யக் கூடும் என்று கூறப்படுகின்றது. இதனால் எதிர்மறை சிந்தனைகள், மனப்பதட்டம், கோபம், போன்ற விஷயங்கள் அதிகமாகும்.