வர்த்தகரின் வீட்டு வளாகத்தில் புகுந்த இனந்தெரியாத கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று சேதப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்திவருபவரின் வீட்டிற்கே குறித்த கும்பல் 3 மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் வந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.