நாம் அனைவரும் வருடத்தின் இறுதி கட்டத்தில் இருக்கின்றோம். கோவிட் தொற்று காரணமாக ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்களில் வீட்டில் இருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களே மக்களிடையே அதிகம் காணப்படுகிறது.

சிலர் ஆண்ட்ராய்டு ஃபோன்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி வந்தாலும், பலர் அதிலிருக்கும் சில ட்ரிக்குகளை பெரிதாக பயன்படுத்தாமல் அதன் பலன்களை முழுமையாக பெற மாட்டார்கள்.

இந்த பட்டியலில் நீங்களும் இருக்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோனிலிருந்து அதிக பலன்களைப் பெற உதவும் சில வழிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 ஆப்ஸ்கள் பயன்படுத்த முடியும்

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் (Android 7.0 Nougat) வெர்ஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் 2 ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் ஒன்றாக இயக்க உதவுகிறது.

இந்த முறை வெவ்வேறு ஆண்ட்ராய்டு ஸ்கின்களுடன் மாறுபடும் ஆனால் அடிப்படை செயல்முறை ஒன்று தான். மல்ட்டி டாஸ்கிங் செய்ய விரும்பும் போது இந்த அம்சம் மிகவும் கைகொடுக்கும்.

நீங்கள் ஒரு App-ஐ ஓபன் செய்திருக்கும் போது, “Recents” மல்ட்டி டாஸ்கிங் பட்டனை க்ளிக் செய்யவும் அல்லது மேலே ஸ்வைப் செய்து அழுத்திப் பிடிக்கவும்.

நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய Apps-களில் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்து, அதை டிஸ்பிளேயின் மேல் அல்லது இடதுபுறமாகப் பிடித்து இழுத்து, அதன் அருகில் அல்லது கீழ் தோன்றும் மற்றொரு ஓப்பனில் இருக்கும் App-ஐ தேர்ந்தெடுக்கவும்.

இப்போது உங்கள் ஸ்மார்ட் ஃபோனில் 2 ஆப்ஸ்கள் ஒன்றாக இயங்கும். 

Nearby Sharing மூலம் ஃபைல்ஸ்கள் ஷேரிங்

ஆப்பிளின் ஏர் டிராப் போன்ற ஒரு அம்சத்தை ஆண்ட்ராய்டு 11 உடன் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

2 ஆண்ட்ராய்டு டிவைஸ்களிலும் Nearby Sharing எனேபிள் செய்திருந்தால், பெரிய ஃபைல்ஸ்கள் மற்றும் டேட்டாக்களை விரைவாக ஷேர் செய்து கொள்ள முடியும்.

எனவே, நீங்கள் வேலைகளில் பிஸியாக இருக்கும் போது கவனத்தை சிதறடிக்கும் ஆப்ஸை தற்செயலாக திறக்க முடியாது. 

பெட்டைம் மோட்

இந்த மோட் உங்கள் மொபைலை standby-யில் வைக்க அனுமதிக்கிறது. எல்லா ஆப்ஸ்களும் மற்றும் சர்விஸ்களும் ம்யூட் செய்யப்பட்டிருக்கும்.

மேலும் நீங்கள் தூங்கு போது ஃபோனை பயன்படுத்துவதை தடுக்க மொபைல் ஸ்கிரீன் பிளாக் அண்ட வொயிட் மோடிற்கு செல்கிறது.