பிரதானமான 06 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, 425 கிராம் டின் மீன் 55 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கு 05 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசி 05 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 01 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசி 01 ரூபாவாலும், ஒரு கிலோ வெள்ளை பச்சையரிசி 01 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, 425 கிராம் டின் மீனின் புதிய விலை 475 ரூபா என்றும், ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் புதிய விலை 280 ரூபா என்றும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பச்சை அரிசியின் புதிய விலை 175 ரூபா என்றும், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் புதிய விலை 309 ரூபா என்றும், ஒரு கிலோ கிராம் வெள்ளை நாட்டரிசியின் புதிய விலை 206 ரூபா என்றும், , ஒரு கிலோ வெள்ளை பச்சையரிசியின் புதிய விலை 199 ரூபா என்றும் லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், நாடு முழுவதுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டை 35 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.