ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரது சடலம் இஸ்ரேலின் பெட்டா திக்வாவில் அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
“நான் குறித்த இடத்திற்குச் சென்று அவரது உடலின் அடையாளம் காணக்கூடிய பாகங்களை ஆராய்ந்தேன். அதன்படி, அது தனது தாயின் உடல் என்பதை அவரது மூத்த மகன் உறுதிப்படுத்தினார்,
அதன்படி, நாளை காலை இஸ்ரேலில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் அவரது சடலத்திற்கு மத சடங்குகளை செய்ய முயற்சித்து வருகிறோம்.
அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, அவரது உடலை இலங்கைக்கு அனுப்ப எதிர்ப்பார்த்துள்ளோம்.