இலங்கையின் அமைச்சரவையில் இன்று காலை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக இப்பதவிக்கு மேலாக இந்த அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.