வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில்இ இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.நேற்று ஈரானுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுடன் அவர் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் வெளிவிவகார அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளார்.இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியையும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திக்கவுள்ளார்.