அரிசி கையிருப்பு இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனைக்கு அமைய இந்த மதிப்பீடுகள் மற்றும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.
விவசாய திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பெரும் போகத்திலும் இந்த ஆண்டு சிறு போகத்திலும் சுமார் 1.3 மில்லியன் ஹெக்டேர் நெல் வயல்களில் பயிரிடப்பட்டது.
ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 4 மெட்ரிக் தொன் நெல் அறுவடை செய்யப்படும் என மதிப்பிடுகின்றனர்.
இதன்படி, 5.2 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் விளைச்சலின் மூலம் சுமார் 3.1 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு மாதாந்தம் 200,000 மெட்ரிக் தொன் அரிசியும் வருடாந்தம் 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசியையும் தேவைப்படுகிறது.
எனவே, இலங்கையில் 700,000 மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பு நாட்டில் இருக்கும் என விவசாயத் திணைக்களம் கருதுகிறது.
இந்த அறுவடை வரை போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளதால், அரிசி இறக்குமதி செய்யும் நிலை ஏற்படாது என அதிகாரிகள் அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.