நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

அபுதாபியில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்குமிடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஏதும் இடம்பெறவில்லை எனவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்களின் சந்திப்பு பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் தொடர்ச்சியாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதியை சந்தித்த புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதில் மகிழ்ச்சி. அவரது உரை தொடக்க அமர்வின் முக்கிய அம்சமாக இருந்தது” என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கைக்கு பொருளாதார உதவிகளை அளிக்க இந்தியா அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.