கம்பஹாவில் புதிய வகை நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த புதிய வகை நுளம்பு தவளைகளின் இரத்தத்தை உறிஞ்சுவதாகவும் இவை கம்பஹா, மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பூச்சியியல் துறை அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
2 முதல் 3 மில்லிமீட்டர் நீளமுடையதாக குறித்த வகை நுளம்பு காணப்படுவதாகவும் பூச்சியியல் துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய வகை நுளம்புடன் இலங்கையில் மொத்தமாக 156 வகை நுளம்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இந்த வகை நுளம்பு 108 வருடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் அடையாளம் காணப்பட்டதுடன் தொடர்ந்து தாய்லாந்திலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.