ஜூலை மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் 6.3% ஆக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 12% சதவீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4% ஆகக் குறைந்துள்ளதாகவும் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.