காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாக, விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டியில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘நாட்டில் நிலவிய கடும் வறட்சி மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுபோகப் பயிர்ச்செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென் மாகாணம், குருநாகல் மற்றும் உடவளவ பகுதிகளிலுள்ள நெற்செய்கை நிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்போக செய்கையை மேற்கொள்வதற்குரிய நிதி வசதி இல்லாமல் விவசாயிகள் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதன்பிரகாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஒரு ஹெக்ரெயர் நிலப்பரப்;பு விவசாய நிலத்துக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.’ என்று குறிப்பிட்டார்.