என்னை பற்றி ஜனாதிபதிக்கு தெரியும் என்பதால் கிரிக்கெட் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என நம்புவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புதிய நியமனத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வந்த அவர், அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் என்ற ரீதியில் தான் தோல்வியடையவில்லை என்பது ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரியும் எனவும் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.
இடைக்கால கிரிக்கெட் குழுவின் தலைவர் தனது எதிர்கால பணிகள் குறித்தும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரினால் வழங்கப்படும் நியமனங்களில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரமே எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.