உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் 24க்கு செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், அவா் இதனை தொிவித்துள்ளாா்.
எதிா்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை, இவ்வாரம் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது