கடவத்தை – குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை நுழை வாயில் வீதியில் மின்கம்பங்களுக்கு நிலத்தடி ஊடாக பயன்படுத்தப்பட்ட செம்பு மற்றும் அலுமினிய கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்த ஒருவர் அத்துகிரிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 60 கிலோ கிராம் கம்பிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில் மேலும் இருவர் இந்த திருட்டுக்கு வந்திருப்பதும் தெரியவந்தது.
போதைப்பொருளுக்கு அடிமையான 29 வயதுடைய சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதோடு, சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.