சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தொடர்பாடல் சாதனங்களுடன், மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 மடிக்கணினிகள், 121 ஸ்மார்ட் போன்கள், 100 சிறிய ரக சாதாரண கைத் தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள் போன்றவை கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு 10 ஐச் சேர்ந்த 22, 27 மற்றும் 46 வயதான மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.