நெலுவ, பன்னிமுல்ல பகுதியில் உள்ள கறுவா தோட்டத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் கடந்த 23ம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி நேற்று (29) பிற்பகல் கறுவா தோட்டம் ஒன்றிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் 70 வயதுடைய பெண் என தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பொல்கஹவெல, ஹுபத்கம பிரதேசத்தில் வடிகாணில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய சிறைச்சாலை திணைக்கள சார்ஜன்ட்டான குறித்த நபர், இரவு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாத நிலையில் அவரை தேடிய போதே சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.