கொலைகார கேஸ் சிலிண்டர்களை திரும்ப பெறு எனக் கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்களுக்கு எதிராகவும், பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தினால் இன்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது “கொலைகார எரிவாயு சிலிண்டர்களை திரும்ப பெறு, இழப்பீடு கொடு, மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறை, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளும் ஏந்தியிருந்தனர்.
நிறுவனங்களின் நலனுக்காக இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் உயிர்களை அரசாங்கம் பலிகொடுத்துள்ளதாக சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமமாலி அபேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான எரிவாயுவை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.