உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுக்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்து அமுலில் இருக்கும். இந்திய ரூபா குறித்து வெளியாகும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் அவதானம் செலுத்த கூடாது என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் தவறான கருத்துக்களை தெளிவுப்படுத்தும் வகையில் மத்திய வங்கி விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.