சிறீலங்கன் எயார்லைன்ஸில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுள்ளதாக சிறீலங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கும் சிறீலங்கன் எயார்லைன்சில் இருந்து, அண்மைய தேசிய பொருளாதார சவால்களுக்கு பின்னர், விமானிகளும் கணிசமான அளவில் வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்றம், சிறீலங்கன் விமான சேவைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடத்தக்கது.