கடந்த வாரம் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அரசியல் பிரச்சனை காரணமாக தமது பதவியை விட்டு விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர், மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தி்ல் நடைபெற்ற புதிய வாக்கெடுப்பில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் மக்தலேனா எண்டர்சனை (Magdalena Andersson) நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆதரித்தனர்.

இந்தநிலையில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தேர்தல் நடக்கும் வரை அவர் ஒரு கட்சி அரசாங்கத்தை வழிநடத்தவுள்ளார்.

கடந்த புதன்கிழமை பிரதமராக பதவியேற்ற அவர், தமது கூட்டணி வீழ்ச்சியடைந்ததை பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.