சீரகத்தை அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அளவுக்கு மீறி பயன்படுத்தும் ஒவ்வொரு உணவு பொருளும் ஆபத்தே. அந்த பட்டியலில் சீரகமும் ஒன்று.
சீரகத்தை அளவிற்கு அதிகமாக பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
- சீரக விதைகள் செரிமான பிரச்சினைகளுக்கு காரணமாகவும் அமைந்து விடுகின்றன.
- இரைப்பை பகுதியில் அதிக வாயு வெளியேற்றத்திற்கு காரணமாகி, நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.
- சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.
- சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட எண்ணெய் நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.
- கர்ப்பிணிகள், தங்களது உணவில் குறைந்த அளவிலேயே சீரகத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- சீரக விதைகளில் போதையுணர்வை ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பதால் இதை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவும்.
- சீரக விதைகளை அதிகம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில், மனப்பிறழ்வு, மயக்கம் மற்றும் குமட்டல் உணர்வுகள் ஏற்படும்.
- இரத்ததத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவினால், அது நீரிழிவு நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும்.
- நமது உணவில் சீரகம் அதிகரிக்கும் பட்சத்தில், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று பாதியாக குறைத்துவிடும். இத்தகைய நீரிழிவு குறைபாடு கொண்டவர்கள், தங்களது உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.