
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் சமித கினிகே
வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் போதுஇ பிரதான வைரஸிலிருந்து உப பிறழ்வுகளை ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் இவ்வாறு உருவாகும் பிறழ்வுகள் பிரதான வைரஸை விடவும் அபாயம் மிக்கதாகக் காணப்படும் எனவும்தெரிவித்துள்ளார்.
சில மாவட்டங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும்
இதன் காரணமாகவே குறித்த மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கல் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் ஒன்று கூடல்கள் அதிகரித்துள்ளமையே கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கக் காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் கிராம பகுதிகளிலேயே இவ்வாறு அதிகரிப்பு இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேநிலைமை தொடர்ந்தால் மீண்டும் முடக்கத்திற்கே செல்ல வேண்டியேற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.