சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பினார்.
ஜனாதிபதியுடன் குறித்த விஜயத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் நாட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப், அந்தநாட்டின் பிரதமர், லீ சியென் லு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் உள்ளிட்ட அந்த நாட்டு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.
பெரிஸ் உடன்படிக்கையின் 6 ஆம் உறுப்புரிமைக்கமைய காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.