ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் நவம்பர் 14 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பௌத்தம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.