தமிழ் மக்களின் விடிவுக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
தமிழர் தேசமெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் ஆரம்பமானது.
முன்னாள் போராளியான விடுதலை, பொதுச் சுடர் ஏற்றியதை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நல்லூரில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த இடத்திலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.