மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரத்தன தேரரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (25) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே, ராஜாங்கனை சத்தாரத்தன தேரர் நீதிமன்றில் ஆஜராகாததன் காரணத்தினால் பிடியாணை பிறப்பித்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான், சந்தேகநபரான தேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்தார்.
சந்தேகநபரான தேரருக்கு கிடைத்த பணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தகவல்களை முன்வைத்தது.