நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முதலாம்நிலை எச்சரிக்கை இன்று இரவு 8 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேசசெயலகப் பகுதிகளிலும், கேகாலை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் இரத்தினபுரியின் எஹலியகொட மற்றும் குருவிட்ட பிரதேசசெயலகப் பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.