நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் ரசிகர் ஒருவர் சரமாரியாக கேள்வி எழுப்பி விளாசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு படங்களில் நத்து வந்த யாஷிகா சில மாதங்களுக்கு முன்பு காரில் சென்ற போது விபத்துக்கு உள்ளாகியதுடன், இந்த விபத்தில் சம்பவ இடத்தில் அவரது தோழி உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டார்.
இதனால் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த யாஷிகா சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஓரளவிற்கு உடல்நிலை தேறிய யாஷிகா கையில் ஸ்டிக்கின் உதவியுடன் மெதுவாக நடந்து பழகி வந்தார். இந்நிலையில் யாஷிகா பல மாதங்களுக்குப் பிறகு ஒரு கடை திறப்பு விழாவிற்கு கையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்தார்.
யாஷிகாவின் இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
ஆனால் இந்த போட்டோவை பார்த்த ஒரு ரசிகர், நீ இன்னும் சாகலையா என்று கமென்ட் கொடுத்துள்ளார். அதற்கு யாஷிகா எவ்விதமான கோபப்படாமல் நான் சீக்கிரம் சாவதற்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.
ஒரு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வந்துள்ள யாஷிகாவிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்ட அந்த நபருக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.