அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் பண்டாரவளையில் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.பண்டாரவளை, பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு விபத்துக்குள்ளான சாராதி தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே இவ் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு நோயாளர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அம்புலன்ஸ் சாரதியின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.