2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து கட்சி ரீதியாக முடிவெடுப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்கவோ அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ 2030 வரை காத்திருக்க முடியாது என குறிப்பிட்டார்.
மேலும் நடைபெற்றது அமைச்சரவை மாற்றம் அல்ல, பதவி மாற்றம் மாத்திரமே எனவும் குறிப்பிட்டார்.
எனவே, பதவிகளை பரிமாறிக் கொள்வதில் அர்த்தமில்லை எனவும், இதனால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.