நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், நிதியமைச்சர் என்ற வகையில் விசேட வியாபாரப் பண்ட வரி விதித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வரி 2024 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யோகட், வெண்ணெய், பேரீச்சம்பழம், திராட்சை, அப்பிள், மீன் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி விதிக்கப்பட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.