கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பெர வாவியில் இருந்து அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், உயிரிழந்தவர் 05 அடி 03 அங்குல உயரம் கொண்ட ஆண் எனவும், வெளிர் நீல நிற அரை கை செக் சட்டை மற்றும் நீல நிற நீளமான பொட்ஹம் காற்சுட்டையும் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.