மண்சரிவு காரணமாக வெலிமடை பொரலந்த ஹப்புத்தளை வீதி இன்று (6) முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், பேக்ஹோ இயந்திரங்கள் மூலம் மண்ணை அகற்றி விரைவில் வீதியை திறக்க எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதையடுத்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், வரும் பயணிகள் பஸ்களை இருபுறமும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.