தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் பேரவை அங்கீகாரம் வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முடிவெடுக்க குறைந்தபட்சம் 5 வாக்குகள் தேவை. வாக்குகள் சமமாகும் போது மாத்திரம் பயன்படுத்தக்கூடிய அறுதியிடும் வாக்கு சபாநாயகருக்கு உள்ளது. 4/2 என்பது சமமான வாக்குகள் அல்ல! இரண்டாவது முறையாகவும் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.