வரலாற்றில் முதல் தடவையாக பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு உளவியல் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.போருக்குப் பின்னரான காலப்பகுதியிலும் பொருளாதார நெருக்கடியான சூழலிலும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எதிர்கொண்ட உளவியல் ரீதயிலான அழுத்தங்கள், வேலைப்பளு போன்ற நிலைமைகளை உணர்ந்து அந்த நிலைமைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் அதிகாரிகளின் மனதை வலுப்படுத்துவதே இந்த பிரிவின் நோக்கமாக அமைந்துள்ளது.உளவியல் சார் கற்றலில் டிப்ளோமாவை முடித்த 16 அதிகாரிகள் இந்தப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.உளவயில் பிரிவுக்கு உள்வாங்கப்பட்ட அதிகாரிகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குகின்றனர் எனறு தெரிவிக்கப்படுகின்றது.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமை அதிகாரி மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் யோசனைக்கு அமைய இந்த உளவியல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.