சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்படி, பொது நிதி தொடர்பான குழுவிற்கு இலங்கை மத்திய வங்கியை அழைக்க முன்மொழிவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய சூழ்நிலைகள் தொடர்பில் இவ்வாறு அழைத்து விளக்கம் பெறுவதே பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.