நாட்டு மக்கள் விசித்திரக் கதைகளால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்றும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாலேயே நிவாரணம் வழங்க முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.அரைகுறையாக நிறுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை மீண்டும் தொடங்க முடியும் என்றும்,டொலர் கையிருப்பு அதிகரிப்பால் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும், பெப்ரவரி – மார்ச் மாதத்திற்குள் மின் கட்டணம் மற்றும் பொருட்களின் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.வரிச் சுமை அதிகமாக இருப்பதாகவும், வரிகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், பொருட்களின் விலையை படிப்படியாகக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி கூட குறிப்பிட்டுள்ளார். வரிச்சுமையை குறைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பொருளாதாரத்திற்கு அதிகளவான டொலர்கள் சேர்க்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.