மேல் மாகாணத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இடையிடையே பெய்யும் மழையும், வெப்பமான காலநிலையும் நுளம்பு பெருகுவதற்கு சாதகமான சூழ்நிலை என அதன் பணிப்பாளர் நிபுணர் டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.நாடளாவிய ரீதியில் 52 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அபாய வகைகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.